திரையுலகமே கலந்து கொண்ட வரலட்சுமி திருமணம்..! சினிமா பிரபலம் முதல் அரசியல் பிரமுகர் வரை..!
வரலட்சுமி சரத்குமார் :
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்கரான சரத் குமரின் முதல் மனைவியின் மகளான வரலட்சுமி வாரிசு நடிகையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.
இதனையடுத்து தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இதனால் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.
38 வயதாகும் வரலட்சுமி ஆரம்பத்தில் விஷாலை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அது வெறும் புரளி என்பது பினனர் தெரியவந்தது. இவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்த நிலையில் அந்தக் காதலுக்கு வரலட்சுமியின் வீட்டில் சம்மதம் கொடுக்கப்பட்டது.
எனவே அவரை திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும், மிகப்பெரிய தொழில் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம்:
இந்தநிலையில் இருவரது திருமணமும் நேற்று முன் தினம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைப்பெற்றது. அதில் அவர்களது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டார்கள்.
அதனைத் தொடர்ந்து சென்னையில் நேற்று திருமண வரவேற்ப்பு நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள்.
அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் தெலுக்கு திரையுலகமே கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
-பவானி கார்த்திக்