செட்டிநாடு வெள்ளை பணியாரம்..! காலை உணவு..!
பச்சரிசி-1 கப்
உளுத்தம்பருப்பு-3/4 கப்
தண்ணீர்
உப்பு-1/2 தேக்கரண்டி
எண்ணெய்-பொரிப்பதற்கு
முதலில் பச்சரிசி மற்றும் உளுந்தை சுத்தமாக கழுவி பின் தனித்தனி பாத்திரத்தில் 4 மணி நேரத்திற்கு ஊற விட வேண்டும்.
ஒரு மிக்ஸியில் இரண்டிலும் உள்ள தண்ணீரை வடித்து விட்டு அரைக்கவும்.
அரைத்த மாவை சிறிது உப்பு மற்றும் தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.
அடுப்பில் வாணலை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவில் அரை கரண்டி எடுத்து ஊற்றவும்.
பின் மறுபக்கம் திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும்.
அவ்ளோதான் செட்டிநாடு வெள்ளை பணியாரம் தயார். இதனுடன் காரசட்னி சாப்பிட சுவையாக இருக்கும்.