தமிழ்நாட்டின் சார்பாக பொருநை இலக்கியத் திருவிழா இரண்டு நாட்கள் நெல்லையில் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் காணொளி வாயிலாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் பல முக்கிய அமைச்சர்களை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தமிழ் மொழியின் இலக்கிய செழுமையை பறைசாற்றும் வகையில் நெல்லையில் பொருநை இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது இதில் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார் அவர் கூறுகையில், தமிழ் சமூகம் என்பது இலக்கியத்தில் முதிர்ச்சியும் பண்பாட்டையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம். அறிவியல் ரீதியாக கீழடி, சிவகளை, கொற்கை போன்ற அகழாய்வு மற்றும் பல்வேறு முன்னெடுப்புகளால் கண்டறியபடும் பழமை நமது பெருமை. இந்த பெருமைகளை அடுத்த தலைமுறை சந்ததிகளுக்கு எடுத்து சென்று அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் இலக்குடன் இந்த இலக்கிய விழாக்கள் நடக்கவுள்ளது.
மேலும் அவர் பேசுகையில், தமிழ் மொழியில் உள்ள இலக்கிய சிறப்புகளை போற்றுவதற்காக பொருநை, காவிரி, வைகை, சிறுவாணி, சென்னை போன்ற 5 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளது. அதன் முதல் நிகழ்வே இந்த நெல்லை பொருநை இலக்கியத் திருவிழா நடத்தப்டுகிறது. அறிவை விரிவுசெய் அகண்டமாக்கு என்ற பாவேந்தரின் வார்த்தைக்கினங்க தமிழ் மொழயில் செழுமையை உலகுக்கு அறிவிக்கும் விழாவாக நெல்லை பொருநை இலக்கியத் திருவிழா அமையட்டும். மேலும், . இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்” என்று தமிழக முதல்வர் தனது உரையில் தெரிவித்தார்.