மகள் இறந்த 3 வது நாளில் தாய் செய்த செயல்..!
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அடுத்து உள்ள ஆற்காட்டான் குடிசை பகுதியில் வசித்து வருபவர் பாபு (49). லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கு தமிழரசி (39) என்ற மனைவியும் 14 வயதில் அக்சயா என்ற மகளும் இருந்தனர்.
சென்னை ஆவடியில் வசித்து வரும் இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் அக்சயா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
அக்சயா சுமாராக படித்து வந்த நிலையில் பள்ளியின் ஆசிரியர்கள் அக்சயாவின் பெற்றோரை நேரில் வரவழைத்து அக்சயா மீது புகார் தெரிவித்தனர். இதனால் தமிழரசி, மகள் அக்சயாவை கண்டித்திருந்தார்.
”ஆசிரியர்கள் தான் கண்டிக்கிறார்கள் என்றால் வீட்டிலயும் அம்மா திட்டுறாங்களே ” என விரக்தி அடைந்த அக்சயா கடந்த 3-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட பெற்றோர் கதறி துடித்துள்ளனர். பின்னர் அக்சாயாவின் உடலை மீட்டு அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் மகள் இறந்த துக்கத்தில் இருந்த பாபு மற்றும் தமிழரசி சென்னைக்கு செல்லாமல் ஆற்காட்டான் குடியிசையிலேயே இருந்தனர். அதேநேரம், தான் கண்டித்ததால் தான் மகள் தற்கொலை செய்து கொண்டாள் தினமும் பாபுவிடம் புலம்பி வந்த தமிழரசி மனஉளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை தற்கொலை செய்துகொண்டார்.
மகள் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்