12 Total Views , 1 Views Today
ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!
22-வது உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷியா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று அவர் ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரதமர் மோடி, ரஷியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று அவர் முதலில் ரஷியாவுக்கு புறப்பட்டு சென்றார். பிற்பகலில் ரஷியா போய்ச் சேர்ந்தார். மாஸ்கோ விமான நிலையத்தில் அவரை ரஷியாவின் முதன்மை துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் வரவேற்றார்.
அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினரும் இந்திய தேசிய கொடியுடன் வந்து மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு, இன்று மாஸ்கோவில் நடக்கிறது.
அதில் பங்கேற்பதற்காகவே பிரதமர் மோடி சென்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அவர் அங்கு சென்றுள்ளார். ரஷியா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அவர் செல்வதும் இதுவே முதல்முறை ஆகும். பிரதமர் மோடிக்கு நேற்று இரவு, ரஷிய அதிபர் புதின் விருந்து அளித்தார்.
ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று ரஷியாவில் இருந்து ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லனை சந்திக்கிறார். பிரதமர் கர்ல் நெஹம்மருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்கும் இந்திய வம்சாவளியினரை அழைத்து உரையாடுகிறார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..