14 Total Views , 1 Views Today
கார்த்திகை மாதம் என்பதால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தரிசனம் செய்ய சபரிமலைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 27ம் தேதி வரை தொடர்ந்து பூஜைகள் நடைபெறவுள்ளது.
இதனால் சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயில்களில் மூலம் சபரி மழைக்கு பக்தர்கள் வருகிறார்கள். ஆகையால் பக்தர்கள் தான் இருக்கும் இடத்திலேயே குளித்தும் கற்பூரம் மற்றும் விளக்கேற்றி பூஜைகளையும் செய்து வருகின்றனர்.
ரயிலில் பயணம் செய்யும் பக்தர்களும் இதை செய்து வருவதால் பெரும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இது குறித்தான அறிவிப்பில், ரயிலின் மூலம் சபரிமலைக்கு செல்லும் பயணிகள் அங்கயே குளித்தும் கற்பூரம் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்துவருவதால் பெரும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது ஆகையால் அதை தவிர்க்கும் படி கேட்டுக்கொண்டும் உள்ளனர். மேலும், இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயிலில் கற்பூரம் மற்றும் விளக்குகள் ஏற்றினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் பக்தர்களுக்கு எச்சரித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இதனை தொடர்ந்து செய்து வருவதால் ரயில்வே போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்