சுவாச நோய்களை தீர்க்கும் சுண்டைக்காய்…!
சுண்டைக்காயில் காணப்படும் இரும்புச்சத்து, புரதம் மற்றும் கால்சியம் உடலின் வளர்ச்சிக்கு பெரிதும் பயனாக அமைகிறது.
சுண்டைக்காயை நாம் வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது இரத்தம் சுத்தமாகிறது, உடலில் காணப்படும் சோர்வு நீங்கும், மேலும் சுவாசத்தில் கோளாறுகள் கொண்டவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
சுண்டைக்காயை அடிக்கடி எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் உள்ள கிருமிகள் முழுவதுமாக அழிக்கப்படும்.
சுண்டைக்காய் வாய்ப்புண்களை குணப்படுத்தும், வயிறு பகுதியில் காணப்படும் உட்புற சுவருகளை பலப்படுத்தும்.
சுண்டைக்காயில் இருக்கும் ஒரு வித லேசான கசப்புத்தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
நீரிழிவு நோய் உடையவர்களுக்கு சுண்டைக்காய் ரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது.
சுண்டைக்காய் மண்ணீரல் மற்றும் கல்லீரலில் இருக்கும் நோய்களை குணப்படுத்துகிறது.
சுண்டைக்காயில் இருக்கும் அதிகபடியான கால்சியம், எலும்பு தேய்மானம், எலும்பு உறுதியின்மை ஆகியவற்றை சரிச்செய்கிறது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எதிர்காலத்தில் ஏற்ப்படும் எலும்பு பிரச்சனைகளை குறைக்கலாம்.
நாள்ப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுவது நல்ல தீர்வாக இருக்கும்.
சிலருக்கு நெஞ்சு சளி பிடித்துக் கொண்டு வெளியே வராமல் நெஞ்சிலே இருந்துக் கொண்டு பலவித தொந்தரவுகளை ஏற்ப்படுத்தும். இதற்கு ஒரு சிறந்த தீர்வாக சுண்டைக்காய் சாப்பிட்டால் போதும்.
