சீனாவில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகர்த்து கொண்டே செல்கிறது. சீனா நாட்டில் கொரோனா தோற்று மீண்டும் தலை தூக்கியுள்ளதால் அந்நாடு முழு ஊரடங்கை கடைபிடித்து மக்களுக்கு கடுமையான விதிமுறைகள் விதித்துள்ளதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.
2019ம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளும் பொருளாதார மந்த நிலையும் நிலவி வருகிறது. கொரோனா பிடியில் இருந்து இன்னும் முழுமையாக வெளிய வராமல் இருக்கும் நிலையில் சீனாவில் ஒரே நாளில் 40000 கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக சீனா அரசு கடுமையான விதிகளை சீனா மக்களுக்கு விதித்து போது ஊரடங்கை அறிவித்துள்ளது.
இதனால் கோவமான மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பீஜிங், ஷாங்காய் போன்ற பெருநகரங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அரசின் விதிமுறைகள் மீறி போரட்டத்தை நடத்தி வருவதால் அங்கங்கே போராட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது இதனால் பல பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான விடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா இந்த போராட்டத்தை கவனமாக கவனித்து வரும் நிலையில் தற்போது சீன மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது மேலும் அமெரிக்காவின் இந்த செயலால் சீன அரசு குழப்பத்தில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.