தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைமை கழகமான அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி காட்சிகளை பற்றி ஆலோசனை நடத்தபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தலைமை கழகமான அறிவாலயத்தில் திமுக கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் புதிய கூட்டணி கட்சிகள் சேர்ப்பது குறித்தும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்தும் விவாதிக்கபடும் என்றும் மற்றும் சில மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு இருக்கும் பிரச்சனையை குறித்து விசாரிக்கவும் உள்ளது என்று தெரிகிறது. மேலும், தமிழக அமைச்சர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையே அரசுப்பணி ஒப்பந்த தொடர்பான இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் முதல்வர் ஆலோசித்து முடிவெடுப்பார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
சமீப காலமாக திமுக ஆட்சி குறித்து அதன் கூட்டணி கட்சிகள் வைக்கும் விமர்சனம் குறித்து மாவட்ட செயலர்களுடன் ஸ்டாலின் விவாதிக்கவுள்ளார். காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் வெற்றிபெற முடியாது என்று கூறியதும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடக்கும் இந்த திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நடக்கவிருக்கும் விவாதங்கள் தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.