அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு..! அதிபர்கள் கண்டனம்..!
பென்சில்வேனியாவில் பரப்புரை செய்து கொண்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களிடம் இருந்து அவரை காப்பாற்றுவதற்காக பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
அப்போது ட்ரம்ப் காதில் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா ஆகியோர் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், முக்கிய கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோதுகின்றனர். ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரா க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறக்கப்பட்டுள்ளார். அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் டொனால்டு டிரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் ஒரு டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
அப்போது பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு காவல்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..