இந்தியன் 2 திரைப்படத்தை பங்கமாக கலாய்த பிரபல சீரியல் நடிகை..!
நடிகை ரச்சித்தா:
தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பான பிரவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி என்ற சீரியல்களின் மூலம் சின்னத்திரை ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ரச்சித்தா.
இந்த சிரியல்களின் மூலம் தனக்கென தனி ரசிக்கர் பட்டாளத்தையே உருவாக்கினார். பின்னர் அதே தொலைக்காட்ச்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதே ரசிகர்களிடம் வெறுப்பையும் சம்பாதித்தார்.
திருமண வாழ்க்கை:
தன்னுடன் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் ஹீரோவாக நடித்த தினேஷ் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கூறபடுகிறது.
ஆக்டிவாக இருக்கும் ரச்சித்தா:
தற்போது சீரியல்களில் வாய்ப்பு குறைந்துள்ள நிலையில் தனது சமுக வளைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சித்தா அவ்வபோது தனது புகைப்படங்களையும் வீடியோகளையும் பதிவிட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தி்ல் கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் கலயைான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த நடிகை ரக்சிதா, அதிரடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரச்சித்தா பதிவு:
அதில், இந்தியன் 2 திரைப்படம் பெருமளவில் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றும், இந்த படத்திற்கு பதிலாக, இந்தியன் முதல் பாகத்தையே ரீரிலீஸ் செய்திருக்கலாம் என்றும், கூறியுள்ளார். ரச்சித்தாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
-பவானி கார்த்திக்