பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்த கல்யாண ராணி..! போலீசில் சிக்கியது எப்படி..!
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்தவர் (சத்யா வயது 35) இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.. கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.. கணவர் பிரிந்த நிலையில் பணம் சம்பாதிப்பதற்கும், உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் திருமணம் ஆகாத ஆண்களை குறிவைத்து அவர்களிடம் பேசி திருமணம் செய்து கொண்டு பணம் நகைகளை ஏமாற்றி வந்துள்ளார்.
குறிப்பாக அரசு அதிகாரிகள், வசதி படைத்த திருமணமாகாத வாலிபர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த வேலையை செய்துள்ளார். அதற்காக திருமண வரன் பார்க்கும் மேட்ரிமோனியில் அந்த பெண்ணின் விவரங்களை பதிவிட்டுள்ளார்.
அதன் மூலம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு சத்யாவிற்கும் அந்த வாலிபருக்கும் திருமணம் ஆகியுள்ளது. பின்னர் சத்யாவின் நடவடிக்கை மீது சதேகமடைந்த மாப்பிளை வீட்டார் ஈரோடு கொடுமுடி சென்று இந்த பெண்ணை பற்றி விசாரித்துள்ளனர் அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இந்த அதிர்ச்சி தகவலை கேட்ட மாப்பிள்ளையின் தாத்தா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.., இதுகுறித்து அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் சத்யாவை அழைத்து விசாரணை நடத்திய போது அவர், திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், சர்வேயர், டி.எஸ்.பி., சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், தொழிலதிபர்கள் உட்பட 53 பேரை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை மற்றும் பணத்தை ஏமாற்றி சென்றது தெரியவந்தது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..