செல்பி மோகம்.. தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற தம்பதி.. விபரிதத்தில் முடிந்த சோகம்..!
ஒவ்வொரு காலகட்டத்திலும் இள் வயதை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாதிரியாக இருந்துள்ளனர். அந்த வகையில், தற்போது உள்ள இளைய தலைமுறையினர் ரீல்ஸ், புகைப்படம் எடுப்பதில் அதிக மோகம் கொண்டுள்ளனர்.
ரீல்ஸ், மற்றும் புகைப்படங்கள் மூலம் நல்ல பார்வையாளர்களை பெற வேண்டும் என்பதற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல பலர் தயாராக உள்ளனர்.
இந்த தகவலை உறுதி படுத்தும் வகையில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அதாவது
ராஜஸ்தான் பாலி பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராகுல்மேவாடா – ஜான்வி. தம்பதியினர் புகைப்படம் எடுப்பதற்காக கோரம்காட்டில் உள்ள ரயில்வே பாலத்தில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.
தம்பதியின் அருகில் இருந்தவர்களும் அங்குள்ள அழகிய காட்சிகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பாலத்தின் அருகே விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில்வே பாலத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த தம்பதிக்கு விலகி நிற்கவோ, மறுமுனையை அடையவோ நேரம் இல்லை.
இதனை அறிந்த தம்பதி, ரயிலின் மீது மோதுவதை விட கீழே குதித்துவிடலாம் என எண்ணி 90 அடி பள்ளத்தில் கீழே குதித்தனர்.
இதை கண்டு அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். தண்டவாளத்தில் ஆட்கள் நிற்பதை அறிந்த ஓட்டுநர், உடனடியாக அவசர கால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை உடனடியாக நிறுத்தினார்.
இருப்பினும், உயிர் பயத்தில் கீழே விழுந்ததில் இருவருக்கும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் ராகுலின் உடல் நிலை மிக மோசமாகவும் அவரது மனைவிக்கு முதுகுத்தண்டு பகுதியிலும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி காண்போரை படபடப்பை ஏற்படுத்தி வருகின்றது.
-பவானி கார்த்திக்