ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிய முறையில் சாமி தரிசனம்.. முதலமைச்சரின் சூப்பர் திட்டம்..!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்ட பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு யோக லட்சுமி நரசிம்மர், யோகா ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, உள்ளிட்ட பகுதிகள் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ,பக்தர்கள் எளிய முறையில் சாமி தரிசனம் செய்ய விதமாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கம்பிவட சேவையை துவக்கி வைத்தார்.
இதன் மூலம் தினசரி நாள் ஒனறுக்கு ஆயிரம் முதல் 1200 பேர் வரை பக்தர்கள் கம்பிவட ஊர்தியில் பயணித்து எளிய முறையில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக முதல்வர் அவர்களின் துணைவியார் துர்கா ஸ்டாலின் அவர்கள் இன்று கம்பி வட ஊர்தி சேவை மூலம் பயணித்து யோக நரசிம்மரை தரிசனம் செய்தார்.
திருக்கோவில் நிர்வாகம் அவருக்கான சிறப்பு மரியாதை செய்து பிரசாதம் வழங்கினார்கள். அப்போது திருக்கோவில் ஆணையர் ஜெயா ,நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், நகரச் செயலாளர் கோபி, மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் அன்பரசு ,நகர சுற்றுச்சூழல் அணி யாமின், நகராட்சி கவுன்சிலர் லோகேஸ்வரி சரத்பாபு ,ஒன்றிய செயலாளர்கள் பூர்ண சந்தர், சந்திரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
-பவானி கார்த்திக்