ஹெல்தியான திணை பொங்கல்..! காலை உணவு..!
திணை அரை கப்
பாசிப்பருப்பு அரை கப்
மஞ்சள்தூள் கால் ஸ்பூன்
உப்பு தேவையானது
நெய் 1 1/2 ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் 1 நறுக்கியது
இஞ்சி 1 துண்டு பொடி செய்யவும்
மிளகு 1 ஸ்பூன்
முந்திரி தேவையானது
கறிவேப்பிலை சிறிது
திணை மற்றும் பாசிப்பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
குக்கரில் ஊற வைத்தது, தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஒரு வாணலில் நெய் ஊற்றி சீரகம், மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், முந்திரி, மிளகு மற்றும் கறிவேப்பிலை போட்டு பொரித்து வேகவைத்த பொங்கலில் சேர்த்து கிளறவும்.
பொங்கல் கெட்டியாக இருந்தால் சுடான நீர் விட்டு கிளறி விட வேண்டும்.
அவ்வளவுதான் சத்தான திணை பொங்கல் தயார். இத்துடன் தேங்காய் சட்னி அல்லது சாம்பார் வைத்து சாப்பிடலாம்.