லாரி ஓட்டுநரின் அலட்சியம்… கேஸ் அடுப்பின் அருகே…!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் கோவை மாவட்டம் முத்து கவுண்டன் புதூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.
அதன்பிறகு இங்கு அழகுராஜா (30) என்பவரும் தங்கியுள்ளார். இவருடன் வீரமணி, பாண்டீஸ்வரன், தினேஷ்குமார் மற்றும் முத்துக்குமார் (24) ஆகியோரும் தங்கி இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மனோஜ் மற்றும் கருப்புசாமி (26) ஆகியோரும் வந்து தங்கியுள்ளனர்.
இதில் 5 பேர் டேங்கர் லாரி ஓட்டும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு செல்வது வழக்கம். அப்படி கொண்டு செல்லும்போது அதில் பெட்ரோல் மற்றும் டீசலை வீட்டில் சேகரித்து வைப்பார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அழகர்ராஜா தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அதன் பிறகு அவர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக கேஸ் அடுப்பின் அருகே ஒரு லிட்டர் கேனை வைத்து 10 லிட்டர் கேனில் இருந்து அதற்கு பெட்ரோலை மாற்றினார்.
அப்போது அடுப்பில் தீ எரிந்து கொண்டிருந்ததால் சிறிதளவு பெட்ரோல் அதில் பட்டவுடன் தீ பிடித்தது. அதோடு அவர் பெட்ரோல் கேனை வீட்டில் வீசியதால் வீடு முழுவதும் தீ பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த தீ விபத்தில் 7 பேரும் சிக்கிக்கொண்ட நிலையில் அவர்கள் கூச்சலிட்டனர். அதன் பின் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்த நிலையில் அவர்களால் தீயை அணைக்க முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் அழகர்ராஜா, முத்துக்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடற்கருகி உயிரிழந்தனர். அதன் பிறகு 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்