இப்படி ‘தக்காளி ஊறுகாய்’ செய்துவச்சிக்கோங்க…!
தக்காளி 1 கிலோ
புளி 1 கப்
எண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் 4 ஸ்பூன்
நல்லெண்ணெய்
கடுகு 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய்
பூண்டு
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
வெந்தய கடுகு பொடி 1 ஸ்பூன்
வெல்லம் 1 துண்டு
தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை லேசான சூடு நீரில் ஊற வைக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி தக்காளி போட்டு வதக்கவும்.
பின் அதில் புளிக்கரைசலை வடிகட்டி சேர்த்தி கொதிக்க விடவும்.
அதில் உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியானதும் ஆறவிட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு போட்டு பொரிந்ததும் சிவப்பு மிளகாய்,பூண்டு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் பெருங்காயத்தூள்,வெந்தய கடுகு பொடி சேர்த்து கலக்கவும்.
அதில் தக்காளி விழுதை சேர்த்து கொதிக்க வைத்து நன்றாக கெட்டியாக மாறியதும் வெல்லம் சேர்த்து கலந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
நன்றாக ஆறவைத்து ஒரு கண்ணாடி பாட்டலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இது தயிர் மற்றும் சூடான சாதத்தில் சாப்பிட அட்டகாசமானதாக இருக்கும்.