இன்று உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது வருகிறது. அதனை ஓட்டி தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் கலைவாணர் அரங்கில் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழகதில் 6 மாவட்டங்களுக்கு நடமாடும் மறுவாழ்வு சிகிச்சை வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார். இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அந்த நிகழ்வில் அவர் பேசுகையில், நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளை மதிக்க வேண்டும் அவர்களின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளியின் உரிமைக்காக உருவாக்கிய அந்த அன்பு பாதை மூலம் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியால் நானும் மகிழ்ந்தேன் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கபடும் ரூ.1000 ஓய்வூதிய தொகை ரூ.1500 ஆக உயர்த்தபடும் என்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஓய்வூதிய தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.