இன்னிக்கு ஓட்ஸ் உப்மா..காலை உணவு..!
ரோல்டு ஓட்ஸ் 2 கப்
எண்ணெய் தேவையானது
கடலை பருப்பு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
வெங்காயம் 1 நறுக்கியது
பச்சை மிளகாய் 4 நறுக்கியது
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை சிறிது
பீன்ஸ் 1 கப்
கேரட் 1 நறுக்கியது
தக்காளி 1 நறுக்கியது
பச்சை பட்டாணி கால் கப்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
உப்பு தேவையானது
தண்ணீர்
எலுமிச்சை பழச்சாறு
வறுத்த வேர்க்கடலை
கொத்தமல்லி இலை
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் கடலைபருப்பு,உளுத்தம் பருப்பு,கடுகு,சீரகம் சேர்த்து பொரிக்க வேண்டும்.
பின் பெருங்காயத்தூள்,வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்தத்து பீன்ஸ்,கேரட்,தக்காளி,பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
பின் மஞ்சள்தூள்,உப்பு,ஓட்ஸ் சேர்த்து கலக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து கலந்துவிட்டு வேக வைக்கவும்.
பின் எலுமிச்சை சாறு,வேர்க்கடலை மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடவும்.
அவ்வளவுதான் சுவையான ஓட்ஸ் உப்மா தயார்.