பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு..! அரசு ஒதுக்கீட்டில்..!
தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் , முதல் நாளான இன்று சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கியுள்ளது . இன்று தொடங்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 27 வரை நடைபெற உள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்து ஜூலை 29-ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும்.
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 433 கல்லூரியில் உள்ள 2,33,376 பொறியியல் இடங்களுக்கு இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். அரசு ஒதுக்கீட்டில் 1.99 லட்சம் இடங்களுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடத்த உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 111 பேர் சேர்வதற்கான இடங்கள் உள்ளது என்று கூறினார்.. ஜூலை 29-ம் தேதி தொடங்கும் பொதுப்பிரிவுக்கான பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 11-ம் தேதி முடிவடைகிறது. பொறியியல் படிப்புக்கு 2.40 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
-லோகேஸ்வரி.வெ