கொலை குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது..! ஏடிஜிபி அருண் அதிரடி..!
வாணியம்பாடியில் கொலை குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த இளைஞர்கள் 2 பேர் கைது. இளைஞர் அப்துர் ரஹ்மான் என்பவரின் வீட்டில் 10க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்து செல்போன், சிம்கார்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய கொலை குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு கொலை குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும் எனவும் அவர்களோடு தொடர்புடையவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏடிஜிபி அருண், உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி – பெரியபேட்டை பகுதியில் அப்துல் ரஹமான் என்பவர் வீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் 10க்கும் மேற்பட்டடோர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது வீட்டில் இருந்த செல்போன், மற்றும் சிம் கார்டுகள் உள்ளிட்ட பல பொருட்களை பறிமுதல் செய்து தொடர்ந்து அப்துர் ரஹமான் கைது செய்து அவரிடம் தனிப்படை போலீசார் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் 2021 செப்டம்பர் 10ம் தேதி வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் கூலிப்படையை சேர்ந்த செல்லா என்கிற செல்வகுமார் ஆகியோர் புகைப்படங்களை வைத்து சமீபத்தில் ரீல்ஸ் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்ததால் குற்றவாளிகளுடன் சேர்ந்து ஏதாவது திட்டம் தீட்டி உள்ளாரா என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அப்துர் ரஹமான் கொலை குற்றவாலியுடன் தொடர்பில் இருந்தது உண்மை என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இதே வழக்கில் நேற்று முன்தினம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த காலு என்கின்ற தஸ்தகீர்(22) என்பவரை நகர போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை குற்றவாளிகள் உடன் தொடர்பில் இருந்த இளைஞர்கள் 2 பேர் கைது செய்து சிறையில் அடைக்கபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..