காதல் வலை வீசி இளம் பெண்ணிடம் அப்படி நடந்து கொண்ட வழக்கறிஞர்… திவீர விசாரணையில் போலீஸ்..!
திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், தாயலூர் கிராமத்தை சேர்ந்த உஷாகுமாரி என்பவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி வழக்கறிஞர் ஜெகதீசனை சந்தித்துள்ளார்.
அப்போது, ஜெகதீசன் விவகரத்து பெற்று தருவதாக கூறி உஷாகுமாரியின் முழு விவரங்களை தெரிந்து கொண்டுள்ளார். பின்னர் வசதியாக இருப்பதை அறிந்த ஜெகதீசன் உஷாகுமாரிக்கு காதல் வலையை விசீயுள்ளார்.
மேலும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி, அந்த பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை மயக்கிய அவர் நெருங்கி பழகி வந்துள்ளார்.
இந்தநிலையில், ஜெகதீசன் உள்ளாட்சி தேர்தலில் நிற்பதாக கூறி, அவரிடம் ரூ. 10 லட்சம் மற்றும் 1.25 ஏக்கரில் 30 சென்ட் இடத்தை விற்றுதருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்த நிலையில், 50 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்து, அதில் ரூ. 15 லட்சம் பணம் கிடைத்ததாக உஷாகுமாரியிடம் தெரிவித்துள்ளார்.
இதனை பற்றி தெரிந்துகொண்ட உஷாகுமாரி, அவரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று கூறி அவரது மனைவியின் புகைப்படத்தையும் காண்பித்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உஷாகுமாரி, தன்னை ஏமாற்றிய வழக்கறிஞர் குறித்து காவல் நிலயத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள ஜெகதீசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்