முதுமையில் வாட்டிய தனிமை.. கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சேர்ந்த முனுசாமி என்பவரின் மனைவி குப்பம்மாள்(65). இவர்களுக்கு சீனுவாசன்(52), பாலகிருஷ்ணன்(50), பாபு(45) என்ற மூன்று மகன்களும், சரசு என்ற மகளும் உள்ளனர்.
அனைவருக்கும் திருமணமாகி சென்னையில் வசித்து வரும் நிலையில் முனுசாமி, குப்பம்மாள் இருவரும் மழையூர் கிராமத்திலேயே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், முனுசாமி, மற்றும் அவரது மனைவி குப்பம்மாளுக்கு ரத்த கொதிப்பு சர்க்கரை நோய் உள்ளதால் அதற்காக் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளனர். 4 பிள்ளைகள் இருந்தும் வயதான இவர்களுக்கு உடனிருந்து கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் தவித்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த இருவரும் வாழ்வதை விட சாவதே மேல் என எண்ணி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.
மறுநாள் காலை, நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரததால் அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர் மகன் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் விரைந்து வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, தாய் தந்தை இருவரும் மயங்கிய நிலையில் வாயில் நுரை தள்ளியவாறு கிடந்தனர். இதை கண்டு கதறி துடித்த அவர் இருவரையும் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்தை தொடர்ந்து, குப்பம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள முனுசாமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கு கவனிக்க யாரும் இல்லாதது தான் காரணமா அல்லது வேறேயேதும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பிள்ளைகள் இருந்தும் முதுமையில் கவனிக்க யாரும் இல்லாதாதால் தம்பதி விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்