ஹைதராபாத் முட்டை தம் பிரியாணி..!
பாசுமதி அரிசி – 200 கிராம்
பட்டை
பிரியாணி இலை
ஏலக்காய்
கிராம்பு
மிளகு
அன்னாசி பூ
உப்பு
முட்டை – 6
வெங்காயம் – 4
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், அன்னாசி பூ , பட்டை, பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
பிரியாணி மசாலா தூள் – 1 1/2 தேக்கரண்டி
தயிர் – 1 கப்
உப்பு
புதினா இலைகள்
குங்குமப்பூ பால் – 2 மேசைக்கரண்டி
கொத்துமல்லி தழை
முட்டையை வேகவைத்து உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதில் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 30 நிமிடம் ஊறவைத்த அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, அன்னாசி பூ உப்பு சேர்த்து அரிசியை முக்கால் பதம் வேகவைத்து பின் அதனை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிரியாணி செய்ய ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,அன்னாசிபூ,பிரியாணி இலை,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,பிரியாணி மசாலா சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தயிர்,உப்பு,கொத்தமல்லி இலை,புதினா இலை சேர்த்து கலந்து வேகவைத்த முட்டையை கீறி இதில் சேர்த்து ஒரு தவாவில் இந்த கலவை இருக்கும் பாத்திரத்தை வைத்து அதன் மேல் வேகவைத்த அரிசியை சேர்த்து அதில் கொத்தமல்லி,புதினா,குங்குமப்பூ சேர்த்து மூடி 15 நிமிடங்களுக்கு தம்மில் வைத்து பின் இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சூடான ஹைதராபாத் முட்டை தம் பிரியாணி தயார்.