முகலாய இனிப்பான ஷாஹி துக்டா..!
நெய்
பிரவுன் பிரட்
பாதாம்
பிஸ்தா
டூட்டி ப்ரூட்டி
சில்வர் பேப்பர் (விரும்பினால்)
சர்க்கரை – 2 கப் (250 மி.லி கப்)
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சை பழச்சாறு
குங்குமப்பூ
முழு கொழுப்புள்ள பால் – 1 லிட்டர்
சர்க்கரை சேர்க்காத கோவா – 100 கிராம்
சோள மாவு
சர்க்கரை மற்றும் தண்ணீரை சம அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொதிக்க விடவும்.
சர்க்கரை கரைந்த பிறகு எலுமிச்சை சாறு சில துளிகள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
சிரப் சிறிது கெட்டியானதும் அதில் சிறிது குங்குமபூ சேர்த்து அதனை ஆறவைத்துக் கொள்ளவும்.
பிரட் துண்டுகளின் ஓரங்களை நறுக்கிவிட்டு அந்த துண்டுகளை நெய்யில் சேர்த்து இரு புறமும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அந்த வறுத்த பிரட் துண்டுகளை சர்க்கரை பாகில் நனைத்துவிட்டு அதனை தனியே எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்கவிடவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் பால்கோவா சேர்த்து கொதிக்கவிடவும்.
சோளமாவை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து அதனை அதில் ஊற்றவும்.
அந்த கலவை கெட்டியாகும். கெட்டியாக மாறியதும் அதனை வறுத்த பிரட் துண்டுகளின் மீது ஊற்றவும்.
பாதாம்,பிஸ்தா,டுட்டி ஃப்ரூட்டி ஆகியவற்றை நறுக்கி அதில் இதனை அலங்கரிக்கவும்.
இதனை 3 மணி நேரத்திற்கு குளிரவைக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான ஷாஹி துக்டா தயார்.இதனை துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம்.