புதிய ஆளுநர்கள் நியமனம்..! குடியரசு தலைவர் அதிரடி முடிவு..! எந்த மாநிலத்தில் யார்..?
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.. 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்துள்ளார்.
புதுச்சேரி :
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கே.கைலாஷ்நாதன், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் குஜராத் மாநிலதில் முதலமைச்சர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.கைலாஷ்நாதன், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தவர்.
ஊட்டியில் பள்ளி படிப்பையும் சென்னையில் பல்கலை கழகத்தில் முதுகலை பட்டமும் முடித்துள்ளார்.
கே.கைலாஷ்நாதன் பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான அதிகாரி என்பது குறிப்பிடதக்கது.
மராட்டி :
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக மராட்டிய சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் :
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ராஜினாமா கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர் முர்மு. பஞ்சாப் ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியாவை நியமித்துள்ளார்.
அசாம் :
அசாம் ஆளுநராக லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாரியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அசாம் மாநிலம் மட்டுமின்றி மணிப்பூர் மக்களையும் சேர்த்து கவனிக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் :
ஜார்க்கண்ட் ஆளுநராக சந்தோஷ் கங்வார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் :
சத்தீஸ்கர் ஆளுநராக ராமன் தேகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேகாலயா :
மேகாலயா ஆளுநராக விஜயசங்கரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா :
தெலுங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும்,
சிக்கிம் :
சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..