“இரண்டாம் உலகத் தமிழ்மொழி வளர்ச்சி மாநாடு” எப்போ தெரியுமா..?
வரும் ஆகஸ்ட் மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் “இரண்டாம் உலகத் தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு” நடைபெறவுள்ளது.. செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழை மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது என்பதெல்லாம் இம்மாநாட்டில் அமையப் பெற்றுள்ளது..
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பன்னாட்டு தமிழ் மொழி மற்றும் பன்னாட்டு கழகம் சார்பில் “இரண்டாம் உலக தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு” தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது..
செய்தியாளர்களை சந்தித்த அக்கழகத்தின் தலைவர் விஆர்எஸ்.சம்பத் மற்றும் விஜிபி. சந்தோசம் கூறியதாவது, சென்னை வளர்ச்சி கழகத்தின் பன்னாட்டுத் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுக் கழகழும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையழும் இணைந்து நடத்தும் “இரண்டாம் உலகத் தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு” அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் காலை 9 மணி முதல் 6 மணி வரை என வரும் ஆகஸ்ட் மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.. இந்த மாநாட்டின் பதிவு கட்டணம் ஆயிரம் ரூபாய்
இம்மாநாட்டில் அமைச்சர்கள், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் விஜி சந்தோசம், கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள், வல்லுநர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.. இந்த மாநாட்டின் இறுதியில் தலைசிறந்த தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழுக்காக பாடுபட்டவர்கள் என உள்நாட்டை சேர்ந்த மூன்று பேருக்கும் வெளிநாட்டில் மூன்று பேருக்கும் “வளர்தமிழ் மாமணி விருது” வழங்கப்படுகிறது,
தமிழ் வழியில் பயின்றோருக்கு வேலை வாய்ப்புகள் மிக குறைவு என ஒரு கருத்து நிலவுகிறது அது குறித்தான அமர்வு இந்த மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் இதில் தமிழ் வழியில் பயின்று அரசு பணியில் உள்ள பலர் கலந்து கொள்கிறார்கள் எனவே மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை நேரடியாக அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல தமிழ் வழியில் பயின்றால் வேலை வாய்ப்புகள் குறைவு என்பதெல்லாம் ஒரு மாயை.. தமிழை எல்லா இடங்களிலும் கொண்டு செல்வது, தமிழின் வளர்ச்சி தொடர்பாக இலக்கிய முதல் தொழில்நுட்பம் வரை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியாக (AI) செயற்கை நுண்ணறிவு மூலம் எப்படி தமிழை மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது என்பதெல்லாம் இம்மாநாட்டில் அமைந்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..