“வெளியே வினாத்தாள் கசிவு, உள்ளே மழைநீர் கசிவு..”
புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் மழை நீர் கசிவது தொடர்பான விடியோ வைரலாகியிருக்கும் நிலையில், வெளியே வினாத்தாள் கசிவு, உள்ளே மழைநீர் கசிவு என்று காங்கிரஸ் ஒன்றிய அரசை கடுமையாக விமரிசித்துள்ளது.
டெல்லி பகுதியில் நேற்று மாலை பெய்த மிக கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. சுமார் 1 மணி நேரத்தில் 11 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் கசியும் பகுதியில் பிளாஸ்டிக் பக்கெட் வைத்து பிடிக்கும் காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் தேங்கியதுடன், புதிய கட்டடத்தின் மையப் பகுதியில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில்தான், காங்கிரஸ் தலைவரும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாக்குர் இந்த விடியோவை பகிர்ந்து, வெளியே வினாத்தாள் கசிவு, உள்ளே மழைநீர் கசிவு என்று விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் புதிய கட்டடம் கடந்தாண்டு மே 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..