ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு..!
கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவேரி கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளா வயநாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடம் உடுப்பி குடகு மாவட்டங்களில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு மங்களூர் சிக்மங்களூர் சிமோகா உடுப்பி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹேமாவதி அணை ஹாரங்கி அணை நுகு அணைகளில் நீர்வரத்து பெரிதும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில். கேஆர்எஸ், கபினி , இரு அணைகளும் முழு கொள்ளளவு எட்டியுள்ளது கபினி அணை கேஆர்எஸ். இரு அணையில் இருந்து மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து நீர்வரத்து ஏற்றும் எரக்கமாக இருப்பதால் அதற்கு ஏற்றார் போல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் இன்று காலை 1 லட்சத்து 70 ஆயிரம் ஆயிரம் கன அடியாக தண்ணீர் வந்தது.
இந்த வரத்து படிப்படியாக உயர்ந்து இன்று மதியம் 3.30 மணி மணி நிலவரப்படி 2 லட்சத்து கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2 லட்சம் கனஅடி தாண்டியது 2019 ஆம் ஆண்டு 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வரத்து வந்த நிலையில் 5 ஆண்டுகள் கழித்து தற்போது 2 லட்சம் கன அடியை எட்டியது உள்ளது திரும்பவும் திசையெல்லாம் கடல் போல் காட்சி அளிக்கிறது.
காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் கரையோர பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் தனியார் விடுதிகளை ஆற்று நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது கரையோர பகுதியில் வாழும் குடியிருப்புகளை சேர்ந்த மக்களை அப்புறப்படுத்தி தனியார் திருமண மண்டபங்கள் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளது.
சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது 17-வது நாள் தொடர்ந்து நீடிக்கிறது. மேலும் வருவாய்த்துறை தீயணைப்பு துறை போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-பவானி கார்த்திக்