சித்தராமையா “மூடா முறைகேடு” விவகாரம்..! ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கேட்ட விளக்கம்.! கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு..!
மைசூரில் மூடா எனப்படும் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் கர்நாடகா முதலமைச்சர் சித்த ராமையாவின் மனைவியின் பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பாக கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் விளக்கம் கேட்டிருப்பது பெரும் பரபரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அளித்துள்ள புகார் மனுவில் சித்தராமையாவிடம் ஆந்திரா ஆளுநர் கெலாட் விளக்கம் கேட்டிருப்பது கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்பதற்கான சதி என அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள வால்மீகி வாரிய நிதி முறைகேடால் அமைச்சர் நாகேந்திரா அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது “மூடா” என்ற நகர்ப்புற மேம்பாட்டு வாரிய முறைகேடு கர்நாடகாவில் பேசும் பொருளாகி கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரிய முறைகேடானது “கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவியின் பேரில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கப்பட்டு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.. அதற்கு சித்தராமையா பதில் கொடுத்துள்ளார்.. அவர் கூறியதாவது தன் மனைவியின் பேரில் உள்ள நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததற்காக்கவே மூடா இந்த 14 மனைகள் இழப்பீடாக ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த மூடா முறைகேடு வழக்கில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக நிர்வாகிகள் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாதயாத்திரை செல்லப்போவதாக அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பாஜகவின் இந்த செயலுக்கு அவர்களது கூட்டணி கட்சியான ஜே.டி.எஸ் பெரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.. இதுகுறித்து ஜேடிஸ் தலைவர் குமாரசாமி கூறுகையில் ஒரு கூட்டணி கட்சியிடம் கலந்து ஆலோசிக்காமல் எப்படி பாஜக தன்னுடைய முடிவுகளை எடுத்துக்கொள்கிறது.. என கேள்வியை எழுப்ப தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சித்தராமையாவிடம்., ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மூடா முறைகேடு குறித்து விளக்கம் கேட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு அம்மாநில அமைச்சர்கள் அடுத்தடுத்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் தமது அரசியல் சாசன வரம்பை மீறி செயல்படுவதாக அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..