“நிலச்சரிவில் தப்பி யானைக்கூட்டத்தில் சிக்கி கொண்டோம்..” மூதாட்டி சுஜாதா உருக்கம்..!
வயநாடு நிலச்சரிவில் இருந்து தப்பி யானைக்கூட்டத்திற்குள் சிக்கி கொண்ட மூதாட்டி சுஜாதாவின் உருக்கம்..,
கடந்த மாதம் ஜூலை 29ம் தேதி இரவு பெய்த தொடர்கனமழையால் அன்று நள்ளிரவு 2 மணியளவில் ஒரு பெரிய சத்தம் கேட்டது. அப்போது திடீரென எங்களது வீட்டிற்குள் திடீரென தண்ணீர் புகுந்தது. அதனால் நாங்கள் வீட்டின் பரனையின் மேல் அமர்ந்து கொண்டோம். அப்போது ஒரு பெரிய மரக்கட்டை ஒன்று எங்களது வீட்டின் மீது முட்டி மோதியது”
அன்று இரவு பெய்த கனமழையால் திடீரென ஒரு பெரிய இடி ஒன்று விழுந்த சத்தமும் கேட்டது. ஆனால், அது இடி அல்ல பாறைகள்.. என்ன இது பாறைகள் வீட்டின் மேல் விழுகிறது என நினைத்து பார்ப்பதற்குள் ஊருக்குள் வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த இயற்கை விபத்தில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் 30 கி.மீ அப்பால் உள்ள நிலம்பூர் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நிலச்சரிவில் இருந்து தனது மகள் சுஜிதா, கணவர் குட்டன், பேரன் சூரஜ் (18) மற்றும் பேத்தி மிருதுளா (12) ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். அது மட்டுமல்லாமல், இடிபாடுகளில் இருந்து பேத்தி கதறி அழுததைச் சமாளித்து அவளது கையை பிடித்துக்கொண்டு குடும்பத்தில் உள்ள மற்ற மூவரும் வெளியேறி, பாய்ந்தோடும் நீரை கடந்து மலைக்குச் சென்றுள்ளதாக சுஜாதா கூறினார்..
நாங்கள் நிலச்சரிவில் இருந்து தப்பி மழை மீது ஏறிக்கொண்டோம்.., நாங்கள் தஞ்சம் அடைந்த இடத்திற்கு அருகே ஒரு காட்டு யானை கூட்டம் இருந்தது. அந்த யானை கூட்டம் எங்களை பார்த்ததும். அதில் கொம்பன் (ஆண் யானை) இருந்தது..
இயல்பாகவே யானைகள் பார்ப்பதற்கு மிகப்பெரிய உருவமாக இருக்கும் ஆனால் அது மனதளவில் குழந்தை.., யானையை துன்புறுத்தாத வரை அது மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை”.. அப்போது “நான் யானையிடம் ஒரு வேண்டுகோளை வைத்தேன். நான் ஒரு பேரழிவில் இருந்து தப்பித்து இங்கே தஞ்சம் அடைந்துள்ளோம்.. யாராவது வந்து எங்களை மீட்கும் வரை எங்களை ஒன்றும் செய்து விடாதே.
எங்களை இங்கே இருக்க அனுமதி கொடு என நான் கண்ணீர் விட்டு கேட்டேன். என்னுடைய வேண்டுகோளை யானை ஏற்றுக் கொண்டது. நாங்கள் காலை 6 மணி வரை அங்கேயே இருந்தோம். காலையில் மீட்பு பணியினர் எங்களை மீட்கும் வரை யானைகளும் அங்கேயே நின்றது. விடிந்ததும் அதன் கண்கள் துளிர்விடுவதைப் நாங்கள் பார்த்தோம். அந்த தருணம் சொல்ல முடியாத அனுபவம்” எனக் கூறினார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..