டிப்பர் லாரி மீது மோதிய இருசக்கர வாகனம்… சம்பவ இடத்திலே நேர்ந்த பரிதாபம்..!
கோவில்பட்டி அருகே சக்கிலியபட்டி நடுத்தெருவைச் சோ்ந்த செல்வக்குமாா் (39) என்பவர் தனியாா் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த வெள்ளிகிழமை அன்று தனது இரு சக்கர வாகனத்தின் மூலம் கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது சிதம்பராபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நின்றிருந்த டிப்பா் லாரியின் பின்புறம் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கரவாகனம் பயங்கரமாக மோதியது.
இதில், ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
தகவறிந்த நாலாட்டின்புதூா் போலீசார் எவ்வித எச்சரிக்கை விளக்குகளையும் எரியச் செய்யாமல் சாலையோரம் டிப்பா் லாரியை நிறுத்திய காரணத்தினால் டிப்பர் லாரி ஓட்டுநரான த. கருத்தப்பாண்டி (37) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்