33 Total Views , 1 Views Today
நீச்சல் பயிற்சியில் ஈடுப்பட்ட 10 வயது சிறுவன்.. தாயின் கண் முன்னே நேர்ந்த சோகம்…
குளத்தூர் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரத்தினகுமார்-ராணி தம்பதியினரின் மகன் கீர்த்தி சபரீஸ்கர்(10). சிறப்பு குழந்தையான இவருக்கு மருத்துவர் ஆலோசனைப்படி குளத்தூரில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சிக்காக சேர்த்தனர்.
நேற்று அளிக்கப்பட்ட நீச்சல் பயிற்சியின் போது சிறுவன் திடீரென நீரில் தத்தளித்துள்ளார். இதனை கண்ட அவரது தாய் ராணி இதுகுறித்து நீச்சல் பயிற்சியாளர் அபிலாஷிடம் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த பயிற்ச்சியாளர் அப்படி இருந்தால் தான் நீச்சல் கற்றுக்கொள்ளமுடியும் என்று கூறி அவரை மீட்காமல் இருந்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுவன் குளத்தில் மிதந்தபடி அசைவின்றி இருந்ததும் கதறி துடித்த தாய் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவறிந்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நீச்சல் குளம் உரிமையாளர் காட்வின் மற்றும் பயிற்சியாளர் அபிலாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்