பற்றி எரியும் வன்முறை..! ஹேக்ஹசினா பதவி ராஜினாமா..!அரசை அமைக்கும் தலைவர்..?
வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவிகிதம் வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இது தவிர சமூக, மற்றும் பொருளாதார சூழலில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், மற்றும் பெண்களுக்கு 10 சதவீதமும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என மொத்த 56ஞதவீதம் இடஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
வங்க தேசத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் 3,000 காலிப்பணியிடங்களுக்கு 4,00,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். இதனால் வேலை வாய்ப்புக்கு அதிக போட்டி ஏற்படுகிறது. இதற்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மற்ற மாணவர்கள் இடஒதுக்கீடு ரத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு ரத்து செல்லாது என்று அறிவித்தது. இரு இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையேயான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 98 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த வன்முறைக்கு காரணமான பிரதமர் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேற்குவங்கமே கலவர பூமியாக மாறியுள்ளது..
இதனால் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இப்படி பட்ட சூழலில் தான்.., வங்கதேச விமானப்படைக்குச் சொந்தமான லாக்ஹீட் C-130J ஹெர்குலஸ் ரக விமானமான AJAX1431 விமானத்தை இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர்…
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அதில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
வங்கதேச பிரதமருடன் மற்றொரு நபர்:
இந்திய எல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வங்கதேசத்தில் இருக்கும் போதில் இருந்தே அதிகாரிகள் அவரை கண்காணித்து வந்துள்ளனர்.
தற்போது அந்த விமானம் டெல்லி நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாகக் சொல்லப்படுகிறது.
வங்கதேசத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பிறகு ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்..
அவரது பதவியை ராஜினாமா செய்தபின் வங்கதேசத்தின் இராணுவத் தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் தற்போது அரசை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-பவானி கார்த்திக்