“போகாதே போகாதே” பூமியிட்டு விலகிய நிலா..!! இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமா..?
பூமியில் இருந்து நிலவு விலகி சென்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.., இதனால் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் எனவும்., பூமியை விட்டு நிலவு விலகிச் செல்வதால் பூமியில் பலவித மாற்றங்கள் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் இருந்து நிலவு பிரிந்து சென்றுள்ளது.. அப்போது, உருவான ஒரு பாறையை வைத்து, அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக் கழகம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. சுமார் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியிலிருந்து நிலவு பிரிந்தபோது உருவான இந்த பாறையை வைத்து தற்போது நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமானம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பூமியில் இருந்து நிலவு ஒவ்வொரு ஆண்டும் 3.8 சென்டிமீட்டர் தூரம் விலகி சென்றுக்கொண்டே இருப்பதால் பூமியில் இருக்கும் நாட்களின் காலம், நேரம் மாறுபடலாம் எனவும் தெரிவித்துள்ளது. இதே வேகத்தில் நிலவு விலகிச் சென்றுக்கொண்டே இருந்தால் சுமார் 20 கோடி ஆண்டுகளில் பூமியின் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
140 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரமாக இருந்த நிலையில் தற்போது 24 நேரமாக மாறி எதிர் காலத்தில் 25 மணி நேரமாக உயர இருப்பது பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..