61 Total Views , 1 Views Today
இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் முடிவடைந்து கடந்த வாரம் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டது. இதில் குஜராத்தில் பாஜகவும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரசும் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.
கடந்த மாதம் ஒரே கட்டமாக இமாச்சல பிரதேசத்திலும், இந்த மாத தொடக்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் கடந்த 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. காங்கிரஸ் கட்சி இமாச்சல பிரதேசத்தில் 40 தொகுதிகளில் வென்று பாஜக வை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது. குஜராத் மாநிலத்தில் 150 தொகுதிகளுக்கு மேல் பிரம்மாண்ட வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைத்து வரலாறு படைத்தது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு மற்றும் குஜராத்தின் முதல்வராக மீண்டும் பூபேந்திர ரஜினிகாந்த் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
டிசம்பர் 11ம் தேதியான நேற்று இமாச்சல பிரதேசத்தின் 15வது முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு மற்றும் துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்றார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகைஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல், அவரது சகோதரி பிரியங்கா என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து {டிசம்பர் 12} இன்று குஜராத் மாநிலத்தின் 18வது முதல்வராக பூபேந்திர ரஜினிகாந்த் படேல் பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் உத்திர பிரதேசத்தின் முதல்வர் யோகி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.