டெஸ்லா மற்றும் ஸ்பைஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் உலகின் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவருமான எலன் மஸ்க் நீண்ட கெடுபிடிக்கு பிறகு ட்விட்டர் நிறுவனத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்கினார். அந்த நிறுவனத்தை வாங்கிய முதலே பல மாற்றங்களையும் அதிரடி முடிவுகளையும் எடுத்து வருகிறார்.
எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு அதில் இருந்த பணியாளர்களை நீக்கி அதிரடி காட்டினார் மேலும் ப்ளூ டிக் பெறுவதற்கு மாதம் 8 டாலர் சந்தா வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்து பெரும் எதிர்ப்பிற்கு மத்தியில் அதையும் நிறைவேற்றினர் பின்னர் லட்சக்கணக்கான பேக் அக்கௌன்ட்களையும் நீக்கி ட்விட்டரையே முழுமையாக மாற்றி வருகிறார். இந்நிலையில் ட்விட்டரில் மிக நீண்ட நாட்களாக இருந்து வரும் கோரிக்கை ஒன்றிற்க்கு பச்சை கொடி காட்டியுள்ளார்.
Yes
— Elon Musk (@elonmusk) December 11, 2022
இதுவரை ட்விட்டேர் தளத்தை பொறுத்தவரை ஒரு பதிவிற்கு வெறும் 280 வார்த்தைகளே உச்சபட்ச அளவாக இருந்தது. இதனால் பல சமூக வலைதளவாசிகள் அதனை உயர்த்தி தர வேண்டும் என்று பல முறை முறையிட்டு வந்தனர். இவ்வாறு இருப்பதால் கருத்துகளை முழுமையாக கூற முடியவில்லை என்றும் இதனால் கருத்துகளை முழுமையாக தெரிவிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் அங்கங்கே எழுந்தது இந்நிலையில் ட்விட்டர் பயனாளர் ஒருவர் எலன் மஸ்கிடம், ட்விட்டரில் 280 வாரத்தைகளாக இருந்த வசதி 4000 வார்திகளாக மாற்றியமைக்கப்படுவதாக கூறும் செய்தி உண்மையா என்று கேட்டிருந்தார். இதற்கு அவர் ஆம் என்று பதிலளித்தார். இதனை தொடர்ந்து ட்விட்டரில் விரைவில் ‘ட்விட்டர் நோட்ஸ்’ என்ற வசதி அறிமுகமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்க்கு பல தரப்பு பயனாளர்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.