ஷேக் ஹசீனாவை கைது செய்ய வலியுறுத்தல்..! இந்தியாவுக்கு வரவுள்ள அடுத்த நெருக்கடி..?
வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா.., 16 ஆண்டுகாலமாக வங்கதேசத்தின் பொருளாதாரத்தை “இந்தியா” உதவியுடன் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. அதேசமயம் “இந்தியா”வின் முழு ஆதரவுடன் வங்கதேச பிரதமராக இருக்கும் ஷேக் ஹசீனா தொடர்ந்து பிரதமராக இருப்பதை உணராத சில சக்திகள் ஹேக் ஹசீனாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியது.., “இந்தியாவே வெளியேறு” என்ற போராட்டம் முதல் மாணவர்களுக்கான மோதல் வரை வங்கதேசமே கலவர பூமியாக மாறியது..
தமக்கு எதிரான அனைத்து போராட்டங்களையும் பாதுகாப்பு படை உதவியுட ன் ஒடுக்கவும் செய்தார் ஷேக் ஹசீனா. சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உச்சகட்ட போராட்டங்கள் தொடங்கியது.
இந்தப் போராட்டங்களை ஒருகட்டத்தில் ராணுவம் வேடிக்கை பார்க்கவும் தொடங்கியது. இதனால் அந்த நாட்டில் ராணுவ ஆட்சி ஏற்படும் அச்சமும் உருவானது. இதனிடையே ஷேக் ஹசீனாவை உடனே ராஜினாமா செய்ய ராணுவம் கெடு விதித்தது. அப்போது ஷேக் ஹசீனா மாளிகைக்குள் வன்முறையாளர்களை நுழைய அனுமதித்தது அந்நாட்டு ராணுவம்.
இதனால் உயிருக்கு அஞ்சிய ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்தார். பின் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.. ஷேக் ஹசீனாவுக்கு தற்போதைய நிலையில் வேறு எந்த ஒரு நாடும் அடைக்கலம் கொடுக்காததால். ஷேக் ஹசீனா இந்தியாவில்தான் தங்கி இருப்பார் என சொல்லப்படுகிறது..
இந்த சூழலில் தான் இந்தியாவிற்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தின் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷேக் ஹசீனாவை இந்திய அரசு கைது செய்து உடனே வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது பெரும் பரபரப்பாக உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..