டுடே ஸ்நாக் கருப்பட்டி பொங்கல்..!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி 100 கிராம்
பாசிப்பருப்பு 50 கிராம்
கருப்பட்டி கால் கிலோ
நெய் 100 கிராம்
ஏலக்காய்த்தூள் சிறிதளவு
வறுத்த முந்திரி 25 கிராம்
திராட்சை 25 கிராம்
செய்முறை:
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை நீர் சேர்த்து நன்றாக குழைய வேக வைக்கவும்.
கருப்பட்டியை சிறிது நீர் சேர்த்து கரைத்து கொதிக்க வைத்து பின் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வேகவைத்த அரிசி பருப்பு,கருப்பட்டி கலவை சேர்த்து கிளறவும்.
நெய் காய்ச்சி அதில் ஊற்றி ஏலக்காய்த்தூள்,வறுத்த முந்திரி,திராட்சை சேர்த்து நன்றாக கிளறவும்.
அவ்வளவுதான் கருப்பட்டி பொங்கல் தயார்.