கடந்த வாரம் மாண்டஸ் புயல் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டது இதனால் முதலமைச்சர் மற்றும் சென்னை மேயர் ஆகியோர் புயல் தாக்கிய பகுதிகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மேயர் பிரியா முதல்வரின் காரில் தொங்கி கொண்டு சென்றது சர்ச்சையானது இதற்கு தற்பொழுது மேயர் பிரியா விளக்கமளிதுள்ளார்.
வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மாண்டஸ் புயலாக கடந்த வெள்ளிக்கிழமை மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது இதனால் பல்வேறு பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டது. இதனை அடுத்து முதல்வர் நேரில் சென்று சேதங்களை ஆய்வு செய்தார். அப்பொழுது உடன் இருந்த சென்னை மேயர் முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்து சென்றது பெரும் சர்ச்சையானது இதற்கு பல தரப்பினர் கண்டங்களை தெரிவித்துவந்த நிலையில் நேற்று அமைச்சர் சேகர் பாபு மேயரின் செயலை விளக்கி மேயர் பிரியாவை பாராட்டினார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், புயலின் பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதனால் முதல்வர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு முன் நான் சேலை வேண்டிய அவசியம் இருந்தது. மேலும் ஒரு ஒரு இடத்திற்குமான தூரம் அதிகமாக இருந்தது அபோது நடந்து சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக முதல்வரின் வாகனம் வந்தது, அதனால் அதில் நான் ஏறி பயணம் செய்தேன். இந்த நிகழ்வு இவ்வளவு பெரிய சர்ச்சையாகும் என்று நான் நினைக்கவில்லை. மேலும் யாரும் தன்னை கட்டாயப்படுத்தவில்லை என்றும் மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார்.