“ஓ பிரையனை எச்சரித்த ஜெகதீப் தன்கர்..” வெளிநடப்பு செய்த அவைத்தலைவர்..!!
பாராளுமன்றத்தில் இன்று மாநிலங்களவை கூட்டம் கூடியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஒலிம்பிக் மல்யுத்தத்த போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினார்.. அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பினார். அதற்கு அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி தரவில்லை.
மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் “டெரிக் ஓ பிரையன்” எழுந்து அவர் கேட்ட கேள்விகள் சில பிரச்சனைகளை கிளப்பியது என சொல்லலாம். அதற்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில் அப்போது டெரிக் ஓ பிரையனை எச்சரித்த ஜெகதீப் தன்கர், “நீங்கள் அவைத்தலைவரை நோக்கி சத்தம் போடுகிறீர்கள். அவையில் உங்கள் நடவடிக்கைகால் மிக மோசமாக இருக்கிறது. உங்கள் நடவடிக்கைக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். அடுத்த முறை வாசல் கதவை காட்டுகிறேன் இப்போ உட்காருங்கள் என பதில் பேசியுள்ளார்.
அதையடுத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சி அமைச்சர் மற்றும் நிர்வாகிகளின் நடவடிக்கை களுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த ஜெதிப் தன்கர், சில நேரங்களில் நான் இங்கு அமர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் நான் கனத்த மனதுடன் வெளி நடப்பு செய்கிறேன் எனக்கூறி அவையில் இருந்து வெளியேறினார்.
அவர்கள் வெளிநடப்பு செய்த பின் அவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் மாநிலங்களவையை நடத்தினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..