சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க முதல்வரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் வரும் 14ம் தேதி அமைச்சராக இருப்பதால் அவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறனர்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதியை தமிழக அமைச்சரவையில் அமைச்சராக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தார். அதனை தொடர்ந்து ஆளுநர் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தார். இந்நிலையில்,வரும் 14-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ராஜபவன் தர்பார் ஹாலில் காலை 9.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சராக பதிவியேற்கும் உதயநிதிக்கு தலைமைச் செயலகத்தில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முன் திமுகவில் உட்கட்சித் தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன கட்சியின் இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அமைச்சராகவும் பதவியேற்க இருக்கிறார். இதனால் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என நிர்வாகிகள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது வருகின்றனர்.அமைச்சரவையில் இடம்பெறும் உதயநிதி, இளைஞர் நலத் துறையின் அமைச்சராக இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேச்சு எழுந்தத என்பது குறிப்பிடத்தக்கது.