நூல்விலை உயர்வு அப்போ வராதவாறு இப்போ ஏன் வரீங்..? அண்ணாமலையை வறுத்தெடுக்கும் மக்கள்..!!
குட்டி ஜப்பான் என்ற அழைக்கப்படும் திருப்பூர் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் 54.2 சதவீதம் பங்களிப்பை அளித்து வருகிறது. பின்னலாடை உற்பத்தியில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது என உலக அளவில் டாலர் சிட்டியாக திகழ்கிறது.. “திருப்பூர்” மாவட்டம்…
அதனை சார்ந்த லட்சக்கணக்கான நிறுவனங்கள் திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வருகிறது. தமிழர்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும்., இங்கே பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 1970ம் ஆண்டு திருப்பூரில் ஜவுளி தொழில் உற்பத்தியில் திருப்பூர் மாவட்டம் நல்ல வளர்ச்சி பெற்றது.. அதன் 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின் பணமதிப்பிழப்பு, ஏற்பட்டது. அதன் ஜிஎஸ்டி வரி, மற்றும் 2019ம் ஆண்டு கொரோனா தொற்று ஊரடங்கு, பருத்தி ஏற்றுமதியை கட்டுப்படுத்துதல்., நூல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நலிவடைய தொடங்கியது.
பங்களாதேஷ் நாட்டிற்கு இறக்குமதி வரியை ரத்து செய்து வரிச்சலுகையை அளித்ததால்., திருப்பூரில் பின்னலாடை தொழில் மிகவும் நலிவடைய செய்தது. அதன் உற்பத்தி மற்றும் தொழிலாளர்களின் சம்பளம் குறைவு காரணமாக வங்கதேசத்திலிருந்து நேரடியாக குறைந்த விலைக்கு துணிகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது.
அதனால் இந்தியாவின் ஜவுளி தொழிலை ஒன்றிய அரசு அதல பாதாளத்திற்கு தள்ளியது என திருப்பூர் பின்னலாடை தொழிலார்கள் தெரிவித்தனர். மேலும் பங்களாதேஷில் இங்கு இறக்குமதி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் எனக் கோரி
திருப்பூரை சேர்ந்த தொழில் துறையினர் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ஒன்றிய அரசு திருப்பூரை சேர்ந்த தொழில் துறையினரின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலில் எப்படி வெற்றிபெறுவது என்ற நோக்கில் இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலையின் இந்த அறிக்கைக்கு திருப்பூர் தொழில்துறையினர் கூறுகையில், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்கின்றனர். பிற மாநிலத்தவர்களும் திருப்பூரில் உள்ள தொழில் திறனை கண்டு அவர்களது மாநிலத்தில் அதனை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றனர். இப்படி இருக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜவுளித்துறையின் மீது சில அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அவரின் இந்த அறிக்கை திருப்பூர் மக்களிடையே நம்பக தன்மை அற்றதாக இருக்கிறது.
பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி., ஊரடங்கு., போன்ற பல்வேறு பிரச்னைகளால் தொழில் பின்னடைவை சந்தித்தது.., இதனால் பின்னலாடை தொழில் அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டது அதற்கு முக்கிய காரணம் ஒன்றிய அரசு., பருத்தி ஏற்றுமதியை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும். பங்களாதேஷிற்கு கொடுத்துள்ள வரிச்சலுகையை உடனே ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கும் போது அண்ணாமலை ஒன்றிய அரசிடம் அதை பற்றி பேசக்கூடவில்லை..
அவ்வாறு அப்போது மக்களுக்காக பேசி வரிச்சலுகை ரத்து செய்து இருந்தால் பங்களாதேஷில் இருந்து துணிகள் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டு இருக்கும். அப்படி தடை செய்யப்பட்டிருந்தால் ஜவுளி தொழில் தற்போது பல மடங்கு வளர்ச்சி பெற்றிருக்கும். அதை விட்டு தற்போது அரசியலுக்காக மட்டும் அர்த்தமற்ற அறிக்கையெல்லாம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்”.. இதனால் எங்களுக்கு என்ன பயன்
என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தி சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.., அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..