தனுஷ் மீது கோபம் காட்டும் தயாரிப்பாளர்கள்..!! விளக்கம் கொடுத்த ராதாரவி..!!
தனுஷ் தற்போது ஒரு நல்ல படம் கொடுத்திருக்கிறார் என்பதால், தயாரிப்பாளர் சங்கம் இத்தகைய செயலை செய்துள்ளது.. நடிகர் ராதாரவி பேட்டி
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளை சார்பில்,மறைந்த நடிகர்கள் விசு மற்றும் பிறைசூடன் ஆகியோருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியும், மூத்த எழுத்தாளர்கள் மூவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சியானது சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ராதாரவி சினிமாவில் நிரந்தர விரோதிகள் என யாரும் இல்லை, நிரந்தர நண்பர்கள் என யாருமில்லை. பெப்சி யூனியனில் 24 யூனியன்கள் உள்ளது.. இந்த சங்கங்கள் இல்லை என்றால் சினிமாவே இல்லை…
எனக்கு 2 காலிலும் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது, என்னால் நடக்கவே முடியவில்லை ஆனாலும் இங்கே வந்ததற்கான காரணம் என்னுடைய ஆர்வம்.. டப்பிங் யூனியனில் நலிந்த கலைஞர்கள் 10 பேருக்கு வருடம் தோறும் 1 லட்சம் ரூபாய் வரை பண உதவிகள் செய்து வருகிறோம்..
சினிமாவில் என்னை எல்லோரும் திருடன் என்று சொல்கிறார்கள், ஆமாம் நான் எல்லோரின் மனதை திருடியவன் தான். 2 கோடி 3 கோடி பணம் திருடிட்டேன் என்று சொல்கிறார்கள், நான் அதை பற்றி எதுவும் கவலைப்படுவதில்லை…
விஜயகாந்த் இருந்த வரை எந்த சங்கத்திலும் எந்த பிரச்சினையும் வந்ததில்லை.. இப்போது நடக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லை மீறி போகிறது, நடிகர்கள் கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள், தயாரிப்பாளர்களுக்கு அந்த கோவத்தை யார் மீது காமிப்பது என்று தெரியாமல் தற்போது தனுஷ் மீது புகார் கொடுத்து இருக்கிறார்கள்…
தனுஷ் ஒரு நல்ல மனிதர், ஒரு நல்ல படம் தற்போது கொடுத்து விட்டார் என்பதால், அவர் மீது இத்தகைய புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் ஒரு தயாரிப்பாளர் தான் என்பதை மறந்துவிடுகிறார்கள் விரைவில் அனைத்து சங்கங்களும் அமர்ந்து பேசி இந்த பிரச்சினை தீர்க்க வேண்டும்..
எங்களை கூப்பிட்டு தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதில்லை, கூப்பிடாமலே நாங்கள் செல்வோம், எங்களுக்கும் உரிமை உள்ளது…அப்படி எந்த சினிமாவையும் நிறுத்தி வைக்க முடியாது..
எல்லோரும் படம் பண்ண வேண்டும், விஷாலை பற்றி திட்டி கொண்டு தான் இருக்கிறார்கள், ஆனால் அதே நேரத்தில் அவர் எதாவது செய்து கொண்டு தானே வருகிறார்.. இப்போது என்னை நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டால் நான் எங்கே போவது, எனக்கு கேமரா முன்பு நடிக்க மட்டும்தான் தெரியும், இதன்மூலம் இரண்டு சங்கங்களும் பிரச்சினை உடன் தான் இருக்கிறார்கள் என்பதை காட்டியுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..