சில்க் ஸ்மிதாவின் இன்னொரு முகம்.. பிரபல மலையாள இயக்குநர் பேட்டி..!
சில நடிகைகள் சினிமாவில் இருந்து விலகிவிட்டாலே, அவர்களை, ரசிகர்கள் மறந்துவிடுவார்கள். ஆனால், நடிகை சில்க் ஸ்மிதா, இந்த உலகத்தை விட்டு மறைந்த பின்னரும், அவரை பற்றிய ரசிகர்களின் ஆர்வம் குறையவே இல்லை.
அந்த ஆர்வத்தை தூண்டும் வகையில், அவரது இன்னொரு முகம் குறித்து, பிரபல மலையாள இயக்குநர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். அதாவது, மலையாள இயக்குநர் லால் ஜோஸ், ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், சில்க் ஸ்மிதா மிகவும் புரபெஷ்னல் ஆன நடிகை என்றும், சொன்ன நேரத்திற்கு, மேக்கப் அனைத்தும் போட்டு ரெடியாக இருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும், அசோசியட் டைரக்டர்கள் தான் வசனத்தை சொல்லிக் கொடுப்பார்கள் என்பதால், அவர்களுடன் சில்க் ஸ்மிதா சகஜமாக பழகுவார். அவ்வாறு பழகியதால், நான் அவருடன் நண்பர் ஆகிவிட்டேன்.
படப்பிடிப்புக்கு வந்தாலே, என்னை தான் அழைத்துக் கொண்டே அவர் இருப்பார். இதனால், சிலர் என்மீது கடுப்பாகிவிடுவார்கள்” என்று கூறியுள்ளார். ஒரு முறை சில்க் ஸ்மிதா கோபப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. படப்பிடிப்பின் நேரம் மாற்றப்பட்ட விவரத்தை, அவரிடம் நான் தெரிவிக்கவில்லை. அதனால், அவர் என்னிடம் கோபம் அடைந்தார்” என்று இயக்குநர் லால் ஜோஷ் கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்