அரசு ஊழியர்களுக்கு இனி ஜாலி தான்..!! அசத்தும் தமிழக அரசு..!!
தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் மாநில அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக அடுத்தடுத்து 4 முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் விலை உயர்வை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் அகவிலைப்படி சம்பள உயர்வு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை விட 46 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதம் வரை உயரும் என அறிவித்துள்ளது.. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2846.16 கோடி செலவு ஏற்படும். ஆனால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் இதனால் பயன்பெற இருக்கிறார்கள்.. 46% அகவிலைப்படி இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 50%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் சில அறிவிப்புகள் தெரிவித்துள்ளது..
வருடத்திற்கு இரண்டு முறை சம்பளம் உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த மாதம் சம்பளம் உயர்த்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% அகவிலை உயர்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. 1.1.2024 முதல் அகவிலைப்படியை 9% உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1.17 லட்சம் காவல் பணியாளருக்கு 5,000 ரூபாய் வீதம் 58.50 கோடி செலவில் கொரோனா உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.. கொரோனா காலக்கட்டத்தில் களப்பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு முதலைமைச்சர் ஸ்டாலின் அந்த ஊக்கத்தொகைகளை வழங்கினார்..
அதுபோக போக்குவரத்து துறையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு 35கோடி ரூபாய் செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க போவதாக தமிழக அரசு சார்பில் அறிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..