நினைவோ ஓர் பார்வை..!! 80ஸ் களின் கனவு கன்னி “ஸ்ரீதேவி”.. நியாபகம் இருக்கா..?
ஸ்ரீதேவி:
நடிகை ஸ்ரீதேவி தனது 4ஆவது வயதிலேயே ‘துணைவன்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் ‘கந்தன் கருணை’, ‘ஆதி பராசக்தி’, ‘நம் நாடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
முன்னனி நடிகர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜிகணேசன் ஆகியோருடன் நடித்துள்ளது பெருமைக்குரியது.
70களின் காலக்கட்டத்தில் ரஜினி கமலுடம் ஸ்ரீதேவி இணைந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.
கதாநாயகியாக ஸ்ரீதேவி:
இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தில் ஹீரோயினாக கால் பதித்தார் ஸ்ரீதேவி. அதன்பின்பு இவர் நடிப்பில் வெளிவந்த ‘16 வயதினிலே’ ,‘மூன்றாம் பிறை’ போன்ற திரைபடங்களில் அவரின் நடிப்பு இன்றும் பாராட்டப்படுகிறது.
கடைசியாக:
தமிழில் மட்டும் கொடிக்கட்டி பறந்த ஸ்ரீதேவிக்கு இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மிக சிறந்த முறையில் மயன்படுத்திய ஸ்ரீதேவி பான் இந்தியா நடிகையாக வலம் வந்தார்.
பின்னர் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஸ்ரீதேவி நீண்ட இடைவேளிக்கு பிறகு ”மாம்” திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்திற்காக 2017ஆம் ஆண்டு பத்மபூசன் விருது வழங்கி கௌரவித்தது. இப்படி நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் அணைத்து மொழி ரசிகர்களையும் கவரந்த இவர் 2018 பிப்ரவரி 24-ல் மரணம் அடைந்தார்.
பிறந்த நாள்:
சில நடிகைகள் சினிமாவில் இருந்து விலகிவிட்டாலே, அவர்களை, ரசிகர்கள் மறந்துவிடுவார்கள். ஆனால், நடிகை ஸ்ரீதேவி இந்த உலகத்தை விட்டு மறைந்த பின்னரும், அவரை பற்றிய ரசிகர்களின் ஆர்வம் குறையவே இல்லை. மறைந்தாளும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருகிறார்.
இதனை உறுதி படுத்தும் விதமாக இன்று அவரது 60வது பிறந்தநாள் என்பதால் கூகுல் நிறுவனம் அவரின் படத்தை சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரமாக (டூடுள்) வடிவமைத்து கூகுள் கெளரவப்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பூமிகா முகர்ஜி இந்த கவன ஈர்ப்புச் சித்திரத்தை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்