ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்துள்ளது மீண்டும் ஆன்லைன் சூதாட்ட மீதான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் வினோத் குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சோகத்தில் இருந்துள்ளார். பின்னர் கல்ல்லூரியின் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் அவரின் உடலை கை பற்றி விசாரணையில் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து சோகத்தில் இருந்ததால் தற்கொலை செய்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழக அரசு ஆன்லைன் ரம்மி மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக அவசர மசோதா இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டு 60 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது வரை அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்துள்ளது மீண்டும் அதன் மீதான எதிர்ப்பு அதிகரித்துள்ளது.