தங்கலான் வாசிகளாக மாறிய ரசிகர்கள்.. தியேட்டர் வாசலில் நடந்த கூத்து..!
விக்ரம்:
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களின் ஒருவர் விக்ரம்.பின்னனிபாடகர்,தயாரிப்பாளார் ஆவார். மேலும் இவர் நடித்த அனைத்து படங்களிலும் அவருடைய காதபாத்திரத்துக்கு தானே குரல் குடுக்கும் பெருமைக்குரிய நடிகர். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,மலையாளம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த சேது,சாமி,பிதாமகன் ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.அதனைதொடர்ந்து இவர் விக்ரம் என்னும் தன்னுடைய நிறுவனத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கலான்:
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். கோலார் தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை, ஸ்டியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளை கடந்து, இந்த திரைப்படம், இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பார்ப்பதற்கு, ரசிகர்களும், பொதுவான சினிமா ஆர்வலர்களும் சென்று வருகின்றனர்.
இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விக்ரம் ரசிகர்கள், தங்கலான் பட கெட்டப்பிலேயே படத்தை பார்க்க சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திரையரங்க ஊழியர்கள், சட்டை அணியாமல் உள்ளே செல்லக் கூடாது என்று, அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.
இறுதியில் சட்டை மாற்றி வந்த பிறகே, அவர்கள் படம் பார்க்க சென்றுள்ளனர்.இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
-பவானி கார்த்திக்