அமரன் திரைப்படத்தின் புதிய போஸ்டர்.. வாழ்த்து தெரிவித்த படக்குழு..!
சிவகார்த்திகேயன்:
நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடிக்க வாய்ப்புகளை பெற்று தற்போது தமிழ் திரைத்துறையில் ஒரு முன்ணிய நடிகராக உள்ளார்.
மேலும் பல ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார். சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார்.
அமரன் புதிய போஸ்டர்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது திரைப்படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் என்கின்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இத்திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.